Ad Banner
 உலகம்

ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க பரிந்துரை

04/02/2026 04:09 PM

ஸ்பெயின், பிப்ரவரி 4 (பெர்னாமா) -- சமூக ஊடகங்களின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கும் வகையில், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஸ்பெயின் ஆலோசித்து வருகிறது.

சமூக ஊடக பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளில் இருந்து, இளைய தலைமுறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர், பெட்ரோ சன்ச்செஸ் தெரிவித்துள்ளார்.

இணையப் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில், இம்முயற்சியும் ஒன்றாகும் என்று பெட்ரோ சன்ச்செஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆபாசம், வன்முறை போன்ற ஆபத்தான உள்ளடக்கத்திலிருந்து இளையர்களைப் பாதுகாப்பதே இந்த பரிந்துரையில் நோக்கம் என்று அவர் கூறினார்.

சமூக ஊடக பயன்பாட்டிற்கான தடையை அமல்படுத்துவதற்கு முன்னர், வயது சரிபார்ப்பு செயல்முறை அமல்படுத்த வேண்டியது அவசியம், என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முன்வைக்கப்பட்டிருக்கும்
பரிந்துரைக்கு அந்நாட்டு மக்களில் பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)