கோலாலம்பூர், பிப்ரவரி 1 (பெர்னாமா) -- கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு, மக்களிடையே ஒற்றுமை உணர்வு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நாட்டின் தலைமைத்துவம் வலியுறுத்தியிருக்கின்றது.
'நமது கூட்டரசுப் பிரதேசம்' என்ற கருபொருளில் கொண்டாடப்படும் இத்தினம், இவ்வட்டாரம் பாதுகாக்கப்பட வேண்டிய பொதுச் சொத்து என்பதை நினைவூட்டுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் ஆகிய மூன்று பிரதேசங்களும் வெறும் நிர்வாக மையங்களாக மட்டும் அளவிட முடியாது.
மாறாக, நாட்டின் வெற்றியின் அடையாளங்களாவும், தனக்கென தனித்துவமான கலாச்சாரத்தையும் அவை கொண்டிருப்பதாக, இரண்டாவது துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோப் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு நிலவரத்தில், நகர்ப்புற மேம்பாடு மக்களை செம்மைப் படுத்தி அவர்களை வளப்படுத்த வேண்டுமே தவிர அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர், ஹன்னா யோ வலியுறுத்தினார்.
குறிப்பாக, பொது இடங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடியதாகவும், சிறந்த அமைப்பின் மூலம் பாதுகாப்பு அம்சங்கள் வலுபெறக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)