Ad Banner
 பொது

கல்வித் துறைக்கு ஏற்ற வேலைகளில் பணிப்புரியும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

26/01/2026 05:17 PM

கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) --  இளங்கலை மற்றும் டிப்ளோமா நிலைகளில் கல்வி முடித்த பட்டதாரிகளில், தங்களது கல்வித் துறைகளுக்கு ஏற்ப பணியாற்றுபவர்களின் விழுக்காடு 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

2021-ஆம் ஆண்டில் 54.3 விழுக்காடாக பதிவான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் 3.3 விழுக்காடு அதிகரித்து, 57.6 விழுக்காடாக பதிவாகியுள்ளதாக உயர்கல்வி துணை அமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹலிம் கூறினார்.

"டிப்ளோமா பொருத்தவரை, தங்களின் துறைக்குத் தொடர்புடைய வேலையில் பணிப்புரியும் மாணவர்களின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 9.5 விழுக்காடு அதிகரித்து 53.3 விழுக்காடாக பதிவானது. 2021-ஆம் ஆண்டு பதிவான 43.8 விழுக்காடுடன் ஒப்பிடுகையில்", என்றார் அவர்.

சிறந்த வேலைகளில் பணிபுரியும் இளங்கலை மற்றும் டிப்ளோமா மாணவர்களின் விழுக்காடு, 2021-ஆம் ஆண்டில் 67.1 மற்றும் 44.7 விழுக்காடாக பதிவான வேளையில், 2024-ஆம் ஆண்டில் முறையே 68.2 மற்றும் 50 விழுக்காடாக அதிகரித்ததாக, அவர் கூறினார்.

இதனிடையே, குறைந்த திறன் கொண்ட வேலைகளில் பணிப்புரியும் மாணவர்களின் எண்ணிக்கை, 2021-ஆம் ஆண்டில் 55.3 விழுக்காடாக இருந்த நிலையில், 2024-இல் 50 விழுக்காடாக குறைந்துள்ளதை, அடாம் அட்லி சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)