இந்தோனேசியா, 26 ஜனவரி (பெர்னாமா) -- இந்தோனேசியா, மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட அந்த நிலச்சரிவினால் காணாமல் போன சுமார் 80 பேரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்ணிலிருந்து மீட்கப்பட்ட புதையுண்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடரப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவினால் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதையுண்டன.
கடினமான நிலப்பரப்பு, அடர்த்தியான நிலச்சரிவு இடிபாடுகள் மற்றும் தொடர் மழை ஆகியவற்றால் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன.
மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை உட்பட மோசமான வானிலை நிலவும் என்று இந்தோனேசியாவின் வானிலை நிறுவனம் முன்னதாக எச்சரித்திருந்திருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)