யங்கூன், 25 ஜனவரி (பெர்னாமா) -- மியன்மார் பொதுத்தேர்தலின் இறுதிக் கட்ட வாக்களிப்பு இன்று நடைபெற்றது.
மூன்று கட்டமாக நடத்தப்பட்ட பொதுத்தேர்தல் இன்றுடன் நிறைவடைந்திருக்கும் நிலையில், அந்நாட்டை புதிய அரசாங்கம் வழிநடத்தவுள்ளது.
இன்று, யங்கூன், மண்டலே உட்பட 61 வட்டாரங்களில் உள்ள மக்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி முதற்கட்ட வாக்களிப்பும், ஜனவரி 11-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்களிப்பும், நடைபெற்றது.
அந்த இரண்டு கட்டங்களிலும், 55 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் முடிவுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு, ஆங்சான் சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
நீதிமன்ற வழக்குகளால் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)