Ad Banner
 பொது

கையூட்டு குற்றச்சாட்டை மறுத்தார் மின்னணு கழிவுகளை அகற்றும் நிறுவன முகவர்

23/01/2026 03:55 PM

சிரம்பான், 23 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த ஆண்டு, ஜே.ஏ.எஸ் எனப்படும் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, மின்னணு கழிவுகளை அகற்றும் நிறுவனத்தின் முகவர் ஒருவர் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

நீதிபதி என். கனகேஸ்வரி முன்னிலையில் தமக்கு எதிரான அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், சூன் கேய் சோங் அதனை மறுத்து, விசாரணைக் கோரினார்.

தமது எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை தவிர்க்க 40 வயதான அந்நபர் கையூட்டு வழங்கியதாக கூறப்படுகிறது.

1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ், நியமிக்கப்பட்ட வளாக உரிமம் இல்லாதது, தலைமை இயக்குநரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாதது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் ஒப்புதல் இல்லாதது மற்றும் நியமிக்கப்படாத வளாகங்களில் திட்டமிடப்பட்ட கழிவுகளை வைத்தது ஆகிய குற்றங்களை அந்நபர் புரிந்துள்ளார்.

நீலாய் தொழிற்சாலை பகுதியில் அவர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் கையூட்டு தொகை அல்லது பத்தாயிரம் ரிங்கிட்டை விட ஐந்து மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)