Ad Banner
 உலகம்

ஐ.ஏ.டி விமானத்திற்கு சொந்தமானதாக நம்பப்படும் கருப்புப் பெட்டி கண்டுடெடுப்பு

22/01/2026 06:47 PM

ஜகார்த்தா, 22 ஜனவரி (பெர்னாமா) -- தெற்கு சுலாவெசியின் புக்கிட் புலுசரவுங்கில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம்,ஐ.ஏ.டி-இன் ஏ.டி.ஆர் 42-500 ரக விமானத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படும் கருப்புப் பெட்டியை தேடல் மற்றும் மீட்புக் குழு கண்டெடுத்துள்ளது.

அவ்விமானத்தின் வால் பகுதியில், அக்கருப்புப் பெட்டி நல்ல நிலையில், முழுமையாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூத்த இராணுவ அதிகாரி, காலாட்படை தளபதி, டோடி ட்ரையோ ஹடி தெரிவித்தார்.

சனிக்கிழமை நண்பகல் மணி 12 அளவில், ஏழு பணியாளர்கள் மற்றும் மூன்று பயணிகளுடன் யோக்யகார்த்தாவிலிருந்து மகாஸ்சாருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மரோஸ் மாவட்டத்தின் வான்வெளியில், அந்த விமானம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

கருப்புப் பெட்டியை வெளியில் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உறுதிப்படுத்தும் செயல்முறைக்காக நடவடிக்கை மையத்தை அடைய சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் டோடி கூறினார்.

கடந்த சனிக்கிழமை தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, பாதிக்கப்பட்ட 10 பேரில் மூவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில், இரண்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று, புதன்கிழமை மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)