Ad Banner
 பொது

எஸ்.எஸ்.பி.ஏ.: 2-ஆம் கட்ட புதிய ஊதிய உயர்வு இன்றிலிருந்து அமல்

22/01/2026 02:34 PM

கோலாலம்பூர், ஜனவரி 22 (பெர்னாமா) -- பொது சேவை ஊதிய முறை எஸ்.எஸ்.பி.ஏ.-வின் கீழ் இரண்டாம் கட்ட புதிய ஊதிய உயர்வு இன்று தொடங்கி அமலுக்கு வந்துள்ளது.

மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க பொது சேவை தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான உந்து சக்தியாக இது அமையும் என்று நம்பப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களின் நலனை பாதுகாப்பதற்கும் மக்களுக்கான சேவை தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஊதிய உயர்வை அமல்படுத்துவதும் ஒன்றாகும் என்று அரசாங்க தலைமை செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாகார் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் என்றாலும் விவேகத்துடன் செலவு செய்யவும் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் ஷம்சுல் அஸ்ரி அறிவுறுத்தினார்.

எஸ்.எஸ்.பி.ஏ.-வைத் தேர்வு செய்த அரசு ஊழியர்கள் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இறுதி சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட உயர்வு விகிதத்துடன் இன்று இரண்டாம் கட்டமாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வை பெற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)