புத்ராஜெயா, ஜனவரி 21 (பெர்னாமா) -- இவ்வாண்டு அமல்படுத்தப்படும் ஐந்து சீர்த்திருத்தங்களில் 1999-ஆம் ஆண்டு பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், Lemon Law சட்டம் தொடர்பான விதிகளை இயற்றுவதும் அடங்கும்.
பயனீட்டாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வெளிப்படையான சந்தை நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி கூறினார்.
பயனீட்டாளர்களின் புகார்கள் அதிகரிப்பதைக் கையாளவும், மிகவும் பொருத்தமான மற்றும் நிலையான மின் வணிக சுற்றுச்சூழல் அமைப்பை உறுதிச் செய்யவும், மின் வணிகம் தொடர்பான சட்டங்களை தமது தரப்பு இயற்றும் அல்லது திருத்தம் மேற்கொள்ளும் என்று டத்தோ அர்மிசான் தெரிவித்தார்.
"நடப்பில் சட்டம் உள்ளது. ஒன்றுமில்லை என்பதல்ல. ஆனால், நாம் மேம்படுத்த வேண்டியவை உள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினைகள் மட்டும் முக்கியமில்லை. ஆனால், சிறந்த அணுகுமுறையில் தொழில்துறையிலிருந்து வாங்குதல் மற்றும் பரிசீலனை ஆகியவை அடங்கும் என்பதை உறுதி செய்ய. பின்னர், நாம் விரிவான ஈடுபாடு மற்றும் தரப்படுத்துதலை மேற்கொள்ள வேண்டும். இந்த செயல்முறைகளில் ஒன்று, பல நாடுகளால் செயல்படுத்தப்படும் நல்ல நடைமுறைகளுக்கு எதிராக தரப்படுத்தல் ஆகும்," என்றார் அவர்.
அதோடு, பாதுகாக்கப்பட்ட அசையும் சொத்துக்களை இயற்றுவது மற்றும் 2010-ஆம் ஆண்டு போட்டிச் சட்டம், 2010ஆம் ஆண்டு போட்டி ஆணையச் சட்டம், 1993-ஆம் ஆண்டு நேரடி விற்பனை மற்றும் பிரமிட் எதிர்ப்புத் திட்டச் சட்டத்தை அமைச்சு திருத்தம் செய்யும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)