Ad Banner
 விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி; இந்தோனேசிய வீராங்கனை சாதனை

20/01/2026 06:29 PM

ஆஸ்திரேலியா, 20 ஜனவரி (பெர்னாமா) -- 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில், வெற்றி பெற்ற முதல் இந்தோனேசிய வீராங்கனை என்ற வரலாற்றை ஜனிசி ஜென் படைத்தார்.

முதல் சுற்று ஆட்டத்தில் அவர், கனடாவின் லெலா ஃபெர்னன்டே-யை நேரடி செட்களில் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த முதல் சுற்று ஆட்டத்தில் 23 வயதுடைய ஜனிசி ஜென் 6-2, 7-6 என்ற புள்ளிகளில் வெற்றிப் பெற்றார்

முதல் செட்டை 36 நிமிடங்களில் முடித்த பொது அவர் அரங்கின் கவனம் ஈர்த்தார்.

கடந்த ஆண்டு, உலகத் தரவரிசையில் 413-வது இடத்தில் இருந்த ஜனிசி ஜென் தற்போது
உலக தரவரிசையில் 59-வது இடத்தில் உள்ளார்.

1998ஆம் ஆண்டு யாயுக் பசூகி-க்குப் பின்னர், Grand Slam பட்டத்தை வென்ற முதல் இந்தோனேசியப் பெண் என்றப் பெருமையையும் அவர் பெற்றிருக்கின்றார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)