Ad Banner
 பொது

ஏ.டி.எம்-இன் விசாரணை ஆவணங்கள் அரசு தரப்பிடம் சமர்ப்பிப்பு

19/01/2026 04:53 PM

கோலாலம்பூர், ஜனவரி 19 (பெர்னாமா) -- Ops Parasit மற்றும் Ops Star தொடர்பான குறித்த ஆய்வு மற்றும் தொடர் உத்தரவைப் பெறுவதற்கு மலேசிய இராணுவப் படை ஏ.டி.எம்-மின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் அரசு தரப்பிடம் சமர்ப்பித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் அந்த விசாரணை அறிக்கை அரசு தரப்பின் பரிசீலனைக்காக இன்று சமர்ப்பிக்கப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம்-இன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாகி கூறினார்.

இவ்விவகாரம் குறித்த அண்மைய நிலவரங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும் டான் ஶ்ரீ அசாம் தெரிவித்தார்.

ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஏ.டி.எம்-இன் இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் நான்கு மூத்த அதிகாரிகள் உட்பட 23 நபர்களை எஸ்.பி.ஆர்.எம் கைது செய்ததாக கடந்த வியாழக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயர் அதிகாரிகள் மற்றும் பொது நலன் சம்பந்தப்பட்ட கூறுகள் அடங்கியிருப்பதால் இவ்வழக்கு நுணுக்கமானதான கருதப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)