கோலாலம்பூர், ஜனவரி 19 (பெர்னாமா) -- கடந்த ஆண்டில் ஆசியான் தலைவராக மலேசியா பெற்ற வெற்றிக்கும் நேர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ததற்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரசாங்கத்தைப் பாராட்டினார்.
மலேசியா தொடர்ந்து நேர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ததால் வேலையின்மை மற்றும் பணவீக்க விகிதங்கள் குறைந்ததோடு நாட்டில் வறிய நிலையும் 0.09 விழுக்காடாக இருந்ததாகவும் மாமன்னர் சுட்டிக்காட்டினார்.
''உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், மலேசியா கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 4.7 விழுக்காடு நேர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ததற்கு நான் வாழ்த்துகிறேன்.''
இன்று, மக்களவை மற்றும் மேலவையின் 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது தவணைக்கான முதல் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து அரச உரையாற்றும்போது சுல்தான் இப்ராஹிம் அப்பாராட்டைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)