Ad Banner
 உலகம்

மௌனி அமாவாசை கொண்டாட்டத்தில் வட இந்திய பக்தர்கள்

19/01/2026 02:34 PM

தென்னாப்பிரிக்கா, ஜனவரி 19 (பெர்னாமா) -- வடக்கை நோக்கிய சூரியனின் நகர்வைக் குறிக்கும் 'மாக்' மாதத்தில், அமாவாசை நாளான 'மௌனி அமாவாசை'-வைக் கொண்டாடும் விதமாக வட இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் நேற்று புனித நீராடி மகிழ்ந்தனர்.

பிரம்மாவுக்கு நன்றிக்கூறும் விதமாக ஆண்டுதோறும் ஒரு மாத காலத்திற்குக் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் பக்தர்கள் புனித நீராடுவதன் மூலம் அவர்களின் பாவங்கள் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

அதிகாலையில் கங்கை நிதியில் அதிகமான பக்தர்கள் புனித நீராடுவதைக் காண முடிந்தது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி நிதிகள் ஒன்றாக இணையும் 'சங்கம்' பகுதியிலும் பக்தர்கள் புனித நீராடினர்.

ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்து நாள்காட்டியின் படி வரும் ஒரு அமாவாசை நாளில் 'மௌனி அமாவாசை' தினம் அனுசரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)