Ad Banner
 உலகம்

இந்தோனேசியாவில் காணாமல் போன ஒரு தனியார் விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது

18/01/2026 04:27 PM

தெற்கு சுலாவேசி, 18 ஜனவரி (பெர்னாமா) -- இந்தோனேசியா, சுலாவேசி தீவு அருகே காணாமல் போன ஒரு தனியார் விமானத்தைத் தேடும் பணி இன்று தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெற்கு சுலாவேசியில் உள்ள மலை பகுதியில், பிற்பகல் மணி 01:17-க்கு அந்த விமானம் கடைசியாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த விமானத்தில் மொத்தம் 11 பேர் பயணித்தனர்.

விமானப்படையின் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் தரைப்படைப் பிரிவுகளின் ஆதரவுடன்,தேடல் மற்றும் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்புப் பணிகளில் சுமார் 400 பேர் ஈடுபட்டுள்ளனர்.

மலைப்பகுதியில் விமானத்தின் சிதைவுகளை தேடல் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இந்தோனேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் இயக்கப்படும் (turboprop ATR 42-500) எனும் அந்த விமானம், யோக்யாகார்த்தாவிலிருந்து யோக்யாகார்தா தெற்கு சுலவேசிக்குச் சென்று கொண்டிருந்தபோது, காணாமல் போனதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)