தெஹ்ரான், ஜனவரி 13 (பெர்னாமா) -- ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா 25 விழுக்காட்டு வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிராம்ப் அறிவித்துள்ளார்.
அந்நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் கூறினார்.
ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக 25 விழுக்காட்டு வரி விதிப்பு உத்தரவு இறுதியானது மட்டுமின்றி அது உறுதியானது என்று தமது Truth Social சமூக தளத்தில் டிராம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி வரி தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நாடு முழுவதும் பரவியுள்ள போராட்டங்களைக் கலைக்க ஈரானிய அதிகாரத் தரப்பு மரணங்கள் ஏற்படும் அளவிற்கு வன்முறையைக் கையாண்டால் அந்நாடு தாக்கப்படும் என்று டிரம்ப் முன்னதாகப் பல முறை எச்சரித்திருந்தார்.
எனினும், தெஹ்ரானுடன் அரசதந்திர அணுகுமுறையை ஆராய்வதில் டிரம்ப் "ஆர்வமாக" இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)