புத்ராஜெயா, 11 ஜனவரி (பெர்னாமா) -- புதிய கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர், மாணவர் மற்றும் பள்ளி சமூகம் என அனைத்து தரப்பினரின் கருத்துகளுக்கு கல்வி அமைச்சு முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
பள்ளிகளை மேம்படுத்தும் திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே நின்றுவிடாமல், இந்த கருத்துகள் அனைத்தும் நடவடிக்கைகளின் வழி, உண்மையான கல்வி உருமாற்றத்தை ஏற்படுத்த கல்வி அமைச்சு உறுதியாக உள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
மலேசிய கல்வி அமைச்சை வழிநடத்தும் போது முடிவுகளை எடுக்கத் துணிச்சல் தேவைப்படும். சில நேரங்களில் நமது முடிவுகள் முற்றிலும் பிரபலமற்றதாக இருக்கும், சில சமயங்களில் அவை முதலில் எதிர்ப்பைச் சந்திக்கும். இருப்பினும், இவ்வாறான சூழல்களில் துணிச்சலுடன் முடிவெடுப்பது அவசியம். ஏனென்றால் துணிச்சலான முடிவு என்பது காலத்திற்கு ஏற்ற முடிவு என்று கூறுகின்றோம்," என ஃபட்லினா சிடேக் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, கல்வி அமைச்சின் ஊழியர்கள் உடனான சந்திப்புக்கூட்டத்தில் ஃபட்லினா சிடேக் அவ்வாறு கூறினார்.
அந்த அணுகுமுறைக்கு இணங்க, புதிய கல்வி பாடத்திட்டம் இவ்வாண்டிலிருந்து கட்டம் கட்ட்மாக அமல்படுத்தப்படும்.
இதன் முதல் கட்டமாக 2026 ஆம் ஆண்டுக்கான பாலர் பள்ளி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)