Ad Banner
 பொது

செங்டுவுக்கு மீண்டும் விமானங்களை அறிமுகப்படுத்துகின்றது மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம்

10/01/2026 03:02 PM

கோலாலம்பூர், ஜனவரி 10 (பெர்னாமா) -- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சீனா,செங்டுவிற்கான விமான சேவையை மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவின் பரந்த சந்தைக்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதுடன் மலேசியா மற்றும் மேற்கு சீனாவிற்கும் இடையிலான விமான இணைப்பை அது மேம்படுத்துகின்றது.

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை நாட்டில் சுற்றுப்பயணிகளின் வருகையை ஆதரிப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விமான நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. 

நேற்று, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1, KLIA1 -இல் இருந்து சீனா, செங்டு தியான்ஃபு அனைத்துலக விமான நிலையம், TFU-ஐ நோக்கி பயணித்த முதல் MH526 ரக விமானம் சுமார் 91 விழுக்காடு சுமையைப் பதிவு செய்ததால், அதற்கான தேவையும் அதிகரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.     

ஒரு வாரத்திற்கு சுமார் ஏழு முறை விமான பயணங்களைச் செயல்படுத்தும் வேளையில், இது இருவழி பயணத்திற்கான தேவையை அதிகரிப்பதோடு வணிகம் மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த விமான சேவை, கோலாலம்பூர் வழியாக ஆசியான், தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள இடங்களுக்குத் தடையற்ற இணைப்பைப் பயணிகளுக்கு வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)