| BREAKING NEWS | Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | |
ஜாலான் பெர்னாமா, ஜனவரி 09 (பெர்னாமா) -- தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் செய்திகளை அணுகும் பொதுமக்களின் முறை மாற்றம் கண்டு வரும் நிலையில், அதற்கு ஏற்ப மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, ஊடகங்களின் மாற்றத்தைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.
பெர்னாமா, நம்பகமான தேசிய ஊடக நிறுவனமாக தனது நிலையை தொடரும் வேளையில், மாற்றம் கண்டு வரும் ஊடக துறைக்கு ஏற்ப தன்னை புதுபித்துக் கொள்ள வேண்டும் என்று, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
வேகமாக பகிரப்படும் தகவல்கள் மற்றும் போலி தகவல்களினால் அதிகரித்து வரும் ஆபத்து ஆகியவை பொதுத் தொடர்பு துறை, ஒரு வியூக அரசாங்கத் தொடர்பு அணுகுமுறையைக் கோருவதாக டத்தின் படுக்கா நூருல் அஃபிடா விளக்கினார்.
''இந்தச் சூழலில், தொடர்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமான பெர்னாமாவின் பங்கு, செய்தி மற்றும் உள்ளடக்க வழங்குநராக மட்டுமல்லாமல், நாட்டின் குறிப்பிடத்தக்கத் தகவல் தொடர்பு கேந்திரத்தின் முக்கிய மையமாகவும் உள்ளது,'' டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் கூறினார்.
வெள்ளிக்கிழமை, விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற பெர்னாமா 2026 புத்தாண்டு கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
இதில், பெர்னாமா தலைமைச் செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ், செய்தி சேவைக்கான இடைக்கால துணைத் தலைமை செய்தி ஆசிரியர் முஹமட் ஷுக்ரி இஷாக்க்ஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2026-ஆம் ஆண்டில், செய்தித் தரங்களில் சமரசம் காணாமல் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயன்படுத்தும் என்றும் நூருல் அஃபிடா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)