Ad Banner
 விளையாட்டு

மலேசிய பொது பூப்பந்து: கலப்பு இரட்டையர் 2-ஆம் சுற்றுக்கு முன்னேறினர்

07/01/2026 04:51 PM

கோலாலம்பூர், ஜனவரி 7 (பெர்னாமா) -- மலேசிய பொது பூப்பந்து போட்டியில் நாட்டின் கலப்பு இரட்டையரான கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி வெற்றிகரமாக இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

உடல் நலக் குறைவிலும் உறுதியுடன் போராடியதால் இறுதியில் அந்த ஜோடி வெற்றிக் கண்டது.

ஆக்சியாடா அரங்கம்-வில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி ஜோடி தைவானின் வு குவான் சுன்-லீ சியா ஹ்சின் இணையைச் சந்தித்தது.

மலேசிய இணை 56 நிமிடங்களில் 15-21, 21-19, 21-14 எனும் நிலையில் வெற்றிப் பெற்றது.

அதில், முதல் செட்டை இழந்த பிறகு மீண்டும் விட்ட இடத்தைப் பிடிக்க ஆட்ட பாணியை மாற்ற வேண்டியிருந்ததாக சூன் ஹுவாட் தெரிவித்தார்.

நாளை நடைபெறும் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சூன் ஹுவாட்-ஷெவோன் அமெரிக்காவின் பிரெஸ்லி ஸ்மித்-ஜென்னி கை இணையருடன் மோதவுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)