Ad Banner
 பொது

மூன்று துறைகள் மனிதவள அமைச்சுடன்  ஒன்றிணைக்கப்படும்

07/01/2026 04:50 PM

புத்ராஜெயா, ஜனவரி 07 (பெர்னாமா) -- செயல்பாடுகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்க மனிதவள அமைச்சின் கீழ் உள்ள தீபகற்ப மலேசிய மனிதவளத் துறை, தொழிற்சங்க விவகாரத் துறை மற்றும் தொழில்துறை தொடர்பு துறை ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார். 

''உதாரணமாக இன்று நான் துணை அமைச்சருடன் ஒரு விளக்கவுரைக்கு வருவதென்றால், நாங்கள் ஜே.டி.கே.எஸ்.எம்-க்கு வருகை புரிய வேண்டும். அதோடு, மற்றொரு விளக்கவுரைக்கு ஜே.பி.பி செல்ல வேண்டும். எனவே, பிரச்சனை சமமாக இருந்தால் அவை ஒரு சங்கலியை உள்ளடக்கி இருக்கும். அதை நாங்கள் உடைக்க வேண்டுமா? மறைமுகமாக நாங்கள் சிறிய குடும்பத்தை ஒன்றிணைத்து பெரிய குடும்பமாக மாற்றுகிறோம்,'' என்றார் அவர்.

ஒன்றிணைக்கப்படும் மூன்று துறைகளின் புதிய பெயர் உட்பட மறுசீரமைப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தீபகற்ப மலேசியாவில் தற்போது சுமார் 300 பேரும், சபா மற்றும் சரவாக்கில் 100 பேர் மட்டுமே உள்ள ஆள்பல அமலாக்க அதிகாரிகளின் பற்றாக்குறையைக் கையாளவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரமணன் விவரித்தார்.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)