கோலாலம்பூர் , ஜனவரி 07 (பெர்னாமா) -- ஹரிமாவ் மலாயா அணியின் தகுதியற்ற ஏழு விளையாட்டாளர்களை உள்ளடக்கிய போலி ஆவண விவகாரம் தொடர்பில் போலீஸ் இதுவரை 45 புகார்களை பெற்றுள்ளது.
இந்த விசாரணைக்கு உதவ மொத்தம் எட்டு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு தொடர்பாக, விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி கூறியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, மலேசிய காற்பந்து சங்கம் அளித்த, ஹரிமாவ் மலாயா அணியின் தகுதியற்ற ஏழு விளையாட்டாளர்களை உள்ளடக்கிய போலி ஆவண குற்றச்சாட்டுகள் குறித்த புகாரைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
மலேசிய காற்பந்து சங்கம், FAM (எஃப்.ஏ.எம்) மற்றும் மலேசிய குடியுரிமைப் பெற்ற அதன் அயல் நாட்டு ஆட்டக்காரர்கள் எழுவர், ஆவண மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளதாக, அனைத்துலக காற்பந்து சம்மேளனம் ஃபிபா ஒழுங்குமுறைக் குழு கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி குற்றம் சாட்டியது.
அதனைத் தொடர்ந்து, எஃப்.ஏ.எம் மீது சுமார் 18 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ள வேளையில், ஆட்டக்கார்களுக்கு தலா சுமார் 10,560 ரிங்கிட் அபராதமும், வித்தித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)