Ad Banner
 பொது

கே. பத்மநாதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை - போலீஸ்

07/01/2026 04:35 PM

ஈப்போ, ஜனவரி 7 (பெர்னாமா) -- 2014ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி ஈப்போ உயர்நீதிமன்றம் வெளியிட்ட கைது ஆணை தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆடவர் ஒருவரைக் கண்டுபிடிக்க விசாரணைக்கு உதவும் பொருட்டுயைக் கோரியுள்ளது.

57 வயதுடைய கே. பத்மநாதன் @ முஹமட் ரிதுவான் அப்துல்லா எனும் அந்நபர் ஈப்போவில் எண் 10 பெர்சியரான் பெகோ துவா, ஆஃப் ஜாலான் பாசிர் புதே, ஈப்போ என்ற முகவரியைக் கொண்டவர் என்று அம்மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி அபங் ஜைனல் அபிதீன் அபங் அஹ்மத் தெரிவித்தார்.

அவரைத் தெரிந்தவர்கள் அல்லது தகவல் அறிந்தவர்கள் வழக்கு விசாரணை அதிகாரியான ஏ,எஸ்.பி யாப் சியூ செங்என்பவரை 012-9093362 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு எ.சி.பி அபங் ஜைனல் அபிதீன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

2009 ஆம் ஆண்டில் இஸ்லாமைத் தழுவிய முஹமட் ரிதுவான் அப்போது 11 மாத குழந்தையான தமது மகள் பிரசன்னா டிக்சாவுடன் ஈப்போவில் இருந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு 1993 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட முன்னாள் மனைவி இந்திரா காந்தியின் அனுமதி இல்லாமலேயே தமது மகளின் மதத்தை  ரிதுவான் மாற்றினார்.

2010 ஆம் ஆண்டில் ஈப்போ உயர் நீதிமன்றம் அக்குழந்தையைப் பராமரிப்பதற்கான முழுப் பொறுப்பையும் இந்திரா காந்தியிடம் வழங்கியதுடன் பிரசன்னாவை அவரின் தாயிடம் ஒப்படைக்குமாறு  ரிதுவான்-னுக்கு உத்தரவிட்டது.

மேலும் 2016 ஆம் ஆண்டில் தமது இளைய மகளை முன்னாள் மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக  ரிதுவான்-னைக் கைது செய்யுமாறு கூட்டரசு நீதிமன்றம் தேசிய போலீஸ் படைத் தலைவருக்கு உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)