Ad Banner
 பொது

அதிகாரப் பிரிப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு வரவேற்பு

05/01/2026 05:24 PM

புத்ராஜெயா, ஜனவரி 05 (பெர்னாமா) -- இந்த ஜனவரி மாதம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசிய சட்டத்துறை தலைவருக்கும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையிலான அதிகாரப் பிரிப்பு குறித்த சட்ட மசோதாவைத் தாக்கல் செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை தேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுக்கி மொக்தார் வரவேற்றுள்ளார்.

இந்நடவடிக்கை அரசாங்கத்தின் முயற்சி என்றும் குறிப்பாக இது பொது நலனுக்கும் தேசிய நிர்வாகத்திற்கும் பயனளித்தால் அதை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

''நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மசோதா உருவாக்கப்பட நாங்கள் காத்திருக்கிறோம். பின்னர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்போம். அரசாங்கத்தின் அந்த முயற்சிகள் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றால் அதை ஆதரிப்பதில் என்ன தவறு? அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை அது அரசாங்கத்தின் அதிகாரம் இல்லையா? நாங்கள் அதை முழுமையாக ஆதரிக்கிறோம்'', என்றார் டான் ஶ்ரீ முஹமட் டுசுக்கி மொக்தார்.

அந்தப் பரிந்துரையில் தேசிய சட்டத்துறை அலுவலகத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை.

அதைத் தவிர்த்து பிரதமர் அறிவித்த கழகச் சீர்திருத்த முயற்சிக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)