கினபதாஙான், 05 ஜனவரி (பெர்னாமா) -- கினபதாஙான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், வாரிசான் கட்சியின் வேட்பாளராக சுகாவ் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சாட்டி அப்துல் ரஹ்மான் நிறுத்தப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கினபதாஙான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மஸ்லிவாதி அப்துல் மாலெக் லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக வாரிசன் அறிவித்தது.
இரு வேட்பாளர்களின் தேர்வுக்கு, கட்சி ரீதியில் முழு ஆதரவு கிடைத்திருப்பதாக வாரிசான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ டாரேல் லெய்கிங் கூறினார்.
''அவரின் செல்வாக்கின் மூலம் வாரிசன் கட்சிக்கு வெற்றியைக் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என டத்தோ டாரல் லெய்கிங்.
இன்று, கினபதாஙானில் உள்ள ஶ்ரீ லமாக் மண்டபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாரிசான் வேட்பாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் மாற்றத்தைக் கொண்டு வர சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க கினபதாஙான் மற்றும் லாமாக் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு வாரிசான் வாய்ப்பளிப்பதாகவும் Darell தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)