சிலாங்கூர், ஜனவரி 02 (பெர்னாமா) -- லாபம் ஈட்டும் நோக்கத்துடன் பொறுப்பற்ற தரப்பினர் ரமலான் சந்தையில் வியாபாரம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதற்கான அனுமதி செயல்முறையில் கவனமுடன் செயல்படுமாறு ஊராட்சித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைவான வருமானம் ஈட்டும் மக்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இதுவென்பதால் இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''செயல்முறை ஒழுங்காக இருக்க நகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். பணம் கேட்பவர்களை உடனடியாகத் தவிர்க்கவும். எனவே, நாங்கள் உயர் மட்டத்தில் போராடுகிறோம். கீழ் மட்டத்தில் இன்னும் சரியற்ற சூழல் நிலவுகிறது.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
தண்ணீர் வசதி மற்றும் சுற்றுப்புற தூய்மை போன்ற ரமலான் சந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளை மேம்படுத்தக் கோரி வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரிடம் தாம்
கலந்துரையாடவிருப்பதாக பிரதமர் விவரித்தார்.
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, ஜும்ஹுரியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)