கோலாலம்பூர், டிசம்பர் 23 (பெர்னாமா) -- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கே.எல்.ஐ.ஏ, உலகளாவிய பயணிகள் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தற்காலிக இடையூறு முழுமையாக சீரடைந்ததால், பயணிகள் விமானத்திற்குள் நுழைவதற்கான அட்டை மற்றும் சோதனை நடைமுறைகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கின.
பயணிகளில் சுமூகமான செயலாக்கத்தை உறுதி செய்வதற்காக விமான நிலையக் குழுவினர் மற்றும் விமான நிறுவனங்களும் தொடர்ந்து நிலைமையைக் அணுக்கமாக கண்காணிகும் என்று (Malaysia Airports) குழும நிறுவனம், எம்.ஏ.எச்.பி தனது X பதிவில் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
முன்னதாக ஏற்பட்ட இந்த தற்காலிக இடையூறு நாட்டின் பல முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளைப் பாதித்திருந்தாலும் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் உலகளாவிய பயணிகள் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தற்காலிக இடையூறைத் தொடர்ந்து, இது மலேசியாவின் சில விமான நிலையங்களில் பயணிகள் பதிவு மற்றும் விமானத்திற்குள் நுழைவதற்கான செயல்முறைகளைப் பாதித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த இடையூறு ஏற்பட்ட காலத்தில் பயணிகள் காட்டிய பொறுமை மற்றும் ஒத்துழைப்பிற்காக எம்.ஏ.எச்.பி நன்றியையும் தெரிவித்துக் கொண்டது
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)