Ad Banner
Ad Banner
 பொது

கூட்டரசு பிரதேசத்தில் உள்ள பாரம்பரிய கிராமங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும்

22/12/2025 04:01 PM

புத்ராஜெயா, டிசம்பர் 22 (பெர்னாமா) -- தெளிவான கொள்கைகள் மற்றும் பயனுள்ள அமலாக்கத்தின் அடிப்படையில் கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிப்பது மட்டுமின்றி மேற்கொள்ளப்படும் பணிகள் மக்களுக்கு பலனளிப்பதை உறுதி செய்வதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ  கூறினார்.

கூட்டரசு பிரதேசத்தில் உள்ள பாரம்பரிய கிராமங்கள் குறிப்பாக கம்போங் பாரு மற்றும்  கம்போங் சுங்கை பாரு-வை தொடர்ந்து பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

''இனம் அல்லது தோல் நிறம் எங்களது பணியை ஒருபோதும் வரையறுக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. 2008 முதல், சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினராக, சிலாங்கூர் சட்டமன்றத் தலைவராக, சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினராக, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக பணியாற்றிய காலங்களிலெல்லாம், என் கவனம் எப்போதும் கொள்கைகள், அவற்றின் அமலாக்கம் மற்றும் பணியின் விளைவுகளிலேயே இருந்தது. என் தோல் நிறத்தில் அல்ல. என் அறிவும் என் மனமும் மக்களுக்கு சேவை செய்ய கடப்பாடு கொண்டுள்ளது. உடனடியாக பணியாற்றவும் நான் தயாராக இருக்கிறேன்." என்றார் ஹன்னா யோ 

தமது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டரசு பிரதேசங்களின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தவிருப்பதாகவும் ஹன்னா குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயா மெனரா ஶ்ரீ விலயா-வில் தனது அதிகாரப்பூர்வப் பணிகளைத் தொடங்க வருகைப் பதிவேட்டு அட்டையை பதிவு செய்ததோடு விளக்கக் கூட்டத்திலும் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

மேலும், கோலாலம்பூரில் ஏற்படும் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் கனமழையின் தாக்கங்கள் போன்ற பிரச்சனைகள், குறிப்பாக மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஹன்னா யோ சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)