சிரம்பான், டிசம்பர் 19 (பெர்னாமா) -- பையில் அடைக்கப்பட்டு, பெடாஸ், கம்போங் பாது 4-இல் உள்ள ஆளில்லா வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு உதவ, ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று, மலாக்காவில் மாலை மணி 2.30 அளவில் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய அவ்வாடவர், ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக, நெகிரி செம்பிலான் போலீஸ் துணைத் தலைவர் அஸ்.ஏ.சி முஹமட் இட்சாம் ஜாஃபார் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் மேல் விசாரணையை மேற்கொள்ள, அவ்வாடவர் அடுத்த வியாழக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்படுவதாக முஹமட் இட்சாம் கூறினார்.
மரணமடைந்த அப்பெண்ணை, கைது செய்யப்பட்ட ஆடவருக்கு தெரிந்திருப்பதற்கான சாத்தியம் இருக்கும் நிலையில், அவர் இவ்வழக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து போலீசாரிடம் இதுவரை தகவல் எதுவும் இல்லை.
கைது செய்யப்பட்ட ஆடவருக்கு ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பிலான ஆறு குற்றப்பதிவுகள் இருப்பதாக முஹமட் இட்சாம் குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)