Ad Banner
Ad Banner
 பொது

உடலில் பொருத்தும் கேமராக்களின் பயன்பாட்டை ஜே.பி.ஜே செயல்படுத்தத் தொடங்கியது

19/12/2025 04:00 PM

காஜாங், டிசம்பர் 19 (பெர்னாமா) -- அமலாக்க நடவடிக்கைகளின் போது வெளிப்படைத்தன்மை, கடப்பாடு மற்றும் நேர்மையை அதிகரிப்பதற்கான ஒரு வியூக நடவடிக்கையாக, அமலாக்க உறுப்பினர்களுக்கு BWC எனப்படும் உடலில் பொருத்தும் கேமராக்களின் பயன்பாட்டை, சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து துறை, ஜே.பி.ஜே, கடந்த திங்கட்கிழமை முதல் செயல்படுத்தத் தொடங்கியது.

கேமராக்களில் பதிவாகும் காணொளி மற்றும் குரல் பதிவுகள், அதிகாரப்பூர்வ துணை ஆதாரங்களாக பயன்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில ஜே.பி.ஜே இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் கூறினார்.

"இந்த BWC மூலம் பதிவுச் செய்யப்படும் காணொளி மற்றும் குரல் பதிவுகள் அதிகாரப்பூர்வத் துணை ஆதாரங்களாக பயன்படுத்தப்படும். அதோடு, அமலாக்க உறுப்பினர்களைத் தவறான புரிதல்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அல்லது துன்புறுத்தல்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும்,'' அஸ்ரின் பொர்ஹான் கூறினார்.

நேற்றிரவு, சிலாங்கூர், சுங்காய் ரமால் டோல் சாவடியில், சிலாங்கூர் மாநில ஜே.பி.ஜே-வின் Operasi Khas Bersepadu சோதனை நடவடிக்கையில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

இதனிடையே, இம்மாதம் 31-ஆம் தேதி வரை Perang Lebih Muatan சோதனை நடவடிக்கையை அமல்படுத்த சிலாங்கூர் மாநில ஜே.பி.ஜே உறுதிக் கொண்டுள்ளதாகவும், அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)