Ad Banner
Ad Banner
 பொது

அமைச்சரவை மாற்றம் வலுவான குழுவாகச் செயல்படுவதை உறுதி செய்யும்

16/12/2025 06:43 PM

புத்ராஜெயா, டிசம்பர் 16 (பெர்னாமா) -- அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உள்ளிட்ட மடானி அரசாங்கத்திற்கான புதிய அமைச்சரவையைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

அமைச்சரவை வலுவான குழுவாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கு இம்மாற்றம் அவசியம் என்று கூறிய பிரதமர் புது மலர்ச்சி நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

"நிங்கள் அறிந்தது போலவே அமைச்சரவையில் சில காலியான பதவிகள் உள்ளன. மேலும், சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனென்றால் புதிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதிலும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்தும் அமைச்சரவை ஒரு குழுவாகச் செயல்படுகின்றது", என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சராக ஹன்னா யோ சபா மற்றும் சரவாக்கிற்கான பிரதமர் துறை அமைச்சராக டத்தோ முஸ்தபா சக்முத், மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சராக டாக்டர் சுல்கிஃப்லி ஹசான், பொருளாதார அமைச்சராக அக்மல் நஸ்ருல்லா முஹமட் நசீர் முதலீட்டு வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சராக  டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக ஸ்டீவன் சிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)