Ad Banner
Ad Banner
 அரசியல்

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள்; 49,364 கோடி ரிங்கிட் முதலீடு

15/12/2025 04:39 PM

ஜாலான் பார்லிமன், டிசம்பர் 15 (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் 37 வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சிகள் வழி,

2023 தொடங்கி 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 181 திட்டங்களிலிருந்து 49 ஆயிரத்து 364 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சாத்தியமான முதலீடுகளை மலேசியா பெற்றுள்ளதாக முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியூ சின் டோங் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில், 12 ஆயிரத்து 380 கோடி ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்ட 52 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில்இந்த ஆண்டு 4,890 கோடி ரிங்கிட் மதிப்புள்ள 38 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டதாக லியூ சின் டோங் கூறினார்.

மீதமுள்ள 32, 090 கோடி ரிங்கிட் 2026 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என லியூ சின் டோங் கூறினார்.

2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களின் அடைவுநிலை மற்றும் முதலீடுகளின் பதிவு குறித்து செனட்டர் டத்தோ கோ னாய் க்வோங் எழுப்பிய கேள்விக்கு லியூ சின் டோங் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)