Ad Banner
Ad Banner
 பொது

சமூக ஆர்வலர்களின் குரல் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடியவை - பிரதமர்

15/12/2025 04:30 PM

கோலாலம்பூர், நவம்பர் 15 (பெர்னாமா) -- சமூக ஆர்வலர்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

இதற்கு காரணம், அவர்களின் குரல் பல்வேறு துறைகளின் சூழலை மாற்றி, நாட்டின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்கக் கூடியவையாகும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள், அறிவார்ந்தவர்கள் மற்றும் இயக்கவாதிகள் போன்றோர், தங்களின் போராட்ட உரிமைகளை வெளிப்படுத்துவதில் மறைந்த சமூக இயக்கவாதி S.M. Mohamed Idris-சின் உறுதியான நிலைப்பாட்டை உதாரணமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார்.

"அவரது கருத்துகள் தெளிவானவை, வலிமையானவை. ஆனால் அவருக்குத் தனது வரம்புகள் தெரியும். ஏனென்றால், அவரது புரிதல், போதுமான நுட்பமான வார்த்தைகளில் கட்டமைக்கப்படவில்லை என்றாலும் நாகரிகமான கருத்து உட்பட பலவற்றில் அவர் முன்னோடியாக உள்ளார்,'' என்றார் அவர்

இன்று, கோலாலம்பூரில் "The Man Who Could Move Mountains: Reflections on the Social Activism of S. M. Mohamed Idris" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது அவர் அவ்வாறு கூறினார்.

எப்போதும் அமைதியாக இருந்தாலும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த S.M. Mohamed Idris-வின் ஆளுமை, தங்களுக்கு இடையிலான நல்லுறவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை எனவும் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

உண்மையில், தெளிவான பார்வையை முன்வைப்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு கொள்கை மற்றும் நடவடிக்கையிலும் உள்ள இடைவெளிகளையும் குறைபாடுகளையும் மேம்படுத்த முடியும் என்பதை தமக்கு நினைவூட்டியதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)