கோலாலம்பூர், நவம்பர் 15 (பெர்னாமா) -- ஸ்ரீ நெகாரா பாரம்பரியக் கட்டிடங்களைப் பராமரிப்பது என்பது அதன் மறுசீரமைப்புப் பணிகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல.
மாறாக, சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளத்தின் அர்த்தத்தையும் மீட்டெடுப்பதற்காகவும் ஆகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டை மேம்படுத்துவதற்கு அடித்தளமாக அமைந்த போராட்டம் வாய்ந்த வரலாறு மற்றும் தியாகங்களை இளைய தலைமுறையினருக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதையும் இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"நிச்சயமாக, ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அது ஆங்கிலேயர்கள் காலனித்துவத்தின் மகிமை, பெருமை, ஆட்சி ஆகியவற்றின் தூண்களாக இருந்தன. அதனால்தான், நான் இளமைக் காலத்தில் இதனை ஓர் இடைவெளியாகவும் பலவீனமாகவும் கருதினேன். நமது நாடு சுதந்திரமானது. நமது தந்தைமார்களும் தாய்மார்களும் பெரும் பங்காற்றியுள்ளனர். ஆங்கிலேயர்களின் பலத்தை உடைத்து, நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளனர்." என்றார் அவர்.
இன்று திங்கட்கிழமை ஸ்ரீ நெகாரா பராமரிப்பு நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு தெரிவித்தார்.
வரலாற்று மற்றும் அசல் கட்டிடக்கலை மதிப்புகளை தியாகம் செய்யாமல், அதிக முதலீட்டு அடிப்படையிலான வளர்ச்சியை செயல்படுத்த முடியும் என்பதை ஸ்ரீ நெகாராவின் பாதுகாப்பு நிரூபித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)