Ad Banner
Ad Banner
 பொது

முதன்மை சேவைகளுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு சுற்றறிக்கை மறுஆய்வு செய்யப்படும்

10/12/2025 06:17 PM

கோலாலம்பூர், டிசம்பர் 10 ( பெர்னாமா) -- அணிந்திருந்த உடை காரணமாக இரண்டு பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அனுமதிக்கப்படவில்லை.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி வெளியிடப்பட்ட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வளாகங்கள் போன்ற முன்னணி சேவைக்கான ஆடை விதிகள் சுற்றறிக்கையை, அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலுவலகம் மறுஆய்வு செய்யும்.

இன்றைய அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில், பாதுகாப்பு மற்றும் சுகாதார வளாகங்கள் உட்பட சில முன்னணி சேவைக்கான சுற்றறிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து, அரசாங்க தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் அந்த மதிப்பாய்வை செய்வார் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

“விரைவில் புதிய அறிக்கைகளும் சுற்றறிக்கைகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்”. என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் 

இன்று, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.

பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து போலீஸ் புகார் அளிக்க விரும்பும் எந்தவொரு தனிநபர் மீதும் தடை விதிக்கப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியதை, டத்தோ ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)