சிலாங்கூர், டிசம்பர் 07 (பெர்னாமா) -- கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர் காஜாங் தாமன் பிரிமா சௌஜானாவில் உள்ள கால்வாயில் பந்தை எடுக்க முயன்ற போது பலத்த நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டதால் காணாமல் போன இளைஞரின் சடலம் சனிக்கிழமை இரவு, கண்டுடெடுக்கப்பட்டது.
இரவு மணி 8.35 அளவில், 14 வயதான அவரின் உடல், தாமன் பிரிமா சௌஜானாவில்-வில் உள்ள நீர் சேமிப்புக் குளத்தின் கான்கிரீட் அமைப்பில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் ஏ.சி.பி நஸ்ரோன் அப்டுல் யூசோப் தெரிவித்தார்.
''சடலம் கான்கிரீட் கால்வாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், காணாமல் போனதாக முன்பு அறிவிக்கப்பட்ட இளைஞரின் நல்லுடல் இதுவே என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இந்நிலையை தைரியமாக எதிர்கொள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு நான் ஆறுதல் தெரிவிக்கின்றேன்.'' என்றார் ஏ.சி.பி நஸ்ரோன் அப்டுல் யூசோப்
பிரேதப் பரிசோதனைக்காக அந்த இளைஞரின் நல்லுடல் காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை, பெரிய கால்வாயின் நீரோட்டத்தில் தமது தம்பியோடு, அந்த இளைஞரும் அடித்துச் செல்லப்பட்டப்பட்டார்.
அதே நாளில், இரவு மணி 7.47-க்கு கண்டெடுக்கப்பட்ட அந்த இளைஞரின் 12 வயதுடைய தம்பி இரவு மணி 10-க்கு உயிரிழந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)