ஜாலான் பார்லிமன், 3 டிசம்பர் (பெர்னாமா) -- செலவழிக்கக்கூடிய வருமானத்தின் அடிப்படையில் ஓர் அணுகுமுறையைப் பயன்படுத்துவது உட்பட, மக்களின் வருமானத்தை வகைப்படுத்தும் பொருத்தமான கூறுகளாக்கும் நடைமுறையை அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருகிறது.
அந்நடைமுறையை செயல்படுத்துவதற்கு முன்னதாக, அதன் செயல்திறன் மற்றும் துல்லியத்தை உறுதி செய்வதற்கு நேரமும் பரிசீலனையும் தேவைப்படுவதாக, பொருளாதார துணை அமைச்சர் டத்தோ ஹனிஃபா தயிப் தெரிவித்தார்.
''அரசாங்கம் தற்போது B40, M40 மற்றும் T20 போன்ற வருமான வகைப்பாடுகளைப் நிலைநிறுத்துகிறது. இலக்கிடப்பட்ட பிரிவுகளைத் தீர்மானிக்க, செலவழிக்கக்கூடிய வருமான முறைகளைப் பயன்படுத்துவது உட்பட மிகவும் பொருத்தமான அளவீட்டு முறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது,'' என டத்தோ ஹனிஃபா தயிப்.
அரசாங்க உதவி மற்றும் உதவித் தொகைகளை வழங்குவதில் மொத்த வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்குப் பதிலாக செலவழிக்கக்கூடிய வருமானத்தின் அடிப்படையில் வகைப்பாடு திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து, இன்று மக்களவையில் பெசுட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சே முஹமட் சுல்கிப்லி ஜுசோ எழுப்பியக் கேள்விக்கு டத்தோ ஹனிஃபா அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)