ஜாலான் பார்லிமன், 2 டிசம்பர் (பெர்னாமா) -- பரிசீலனை அல்லது கவனம் கோரி கடிதங்களை வெளியிடும் பொது சேவை துறை அதிகாரிகளை கண்டிப்பது பொருத்தமானதாக இருக்குமே தவிர, பணிநீக்கம் செய்யும் அளவிற்கு அல்ல என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இருப்பினும், ஒரு திட்டத்திற்கு ஆதரவு கடிதங்களை வழங்குவது அல்லது சில தரப்பினரிடமிருந்து ஒப்புதல் கோருவது, குற்றமாக கருதப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
''உண்மையில், ஆதரவு கடிதத்தை வழங்குவதற்கு நான் எப்போதும் உடன்பட மாட்டேன். ஆனால் ஒன்றை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அதாவது அண்மையில் எனது அலுவலகத்தின் அதிகாரிகள் வெளியிட்ட ஆதரவுக் கடிதங்கள் போல, அப்பட்டியலில் இருந்த ஆறு நிறுவனங்களும் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டது தொடர்பில் அத்தகையோர் கண்டிக்கப்படுவது ஏற்புடைய ஒன்றாகும்,'' என
டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின்போது பிரதமர் விளக்கமளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)