Ad Banner
Ad Banner
 பொது

SGLT2 தடுப்பு மருந்து: சர்க்கரை பானங்களுக்கு வசூலிக்கப்பட்ட வரி மூலம் வாங்கப்படும்

02/12/2025 02:31 PM

ஜாலான் பார்லிமன், டிசம்பர் 02 (பெர்னாமா) -- SGLT2 எனப்படும் சிறுநீரகத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்தைக் கொள்முதல் செய்யும் பொருட்டு சர்க்கரை பானங்கள் SSB மீது விதிக்கப்பட்ட கலால் வரியின் மூலம் இரண்டு கோடியே பத்து லட்சம் ரிங்கிட் நிதியைச் சுகாதார அமைச்சு பெற்றுள்ளது.

இதன்வழி 49 ஆயிரத்து 128 நோயாளிகள் பயனடைவர்.

SSB கலால் வரியை உட்படுத்தி 2025ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையில் ஐந்து கோடியே 49 லட்சம் ரிங்கிட்டும் 2024ஆம் ஆண்டில் ஆறு கோடியே 86 லட்சம் ரிங்கிட்டும் வசூலிக்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

''SGLT2 தடுப்பு மருந்துகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். ஏனெனில் இந்த மருந்து இரண்டாவது வகை நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும். அதேவேளையில் இது நாள்பட்ட சிறுநீரக நோய் சி.கே.டிஇன் சிக்கல்களைக் குறைக்கும் திறன் கொண்டது. அதோடு இருதய பாதுகாப்பை வழங்குகிறது,'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட்.

இருதய செயலிழப்பு மற்றும் இருதய நோயால் ஏற்படும் மரணங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தைக் குறைத்தல் நாள்பட்ட சிறுநீரக நோய் CKDஐக் குறைப்பதன் வழி சிறுநீரகச் செயல்பாட்டைப் பாதுகாத்தல் மற்றும் ரத்த அழுத்தம் உட்பட எடையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்நடவடிக்கையின் நோக்கம் என்று டாக்டர் சுல்கிஃப்லி விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)