Ad Banner
Ad Banner
 பொது

சென்யார்: மரம் சாய்ந்ததில் ஒருவர் பலி

28/11/2025 03:59 PM

மலாக்கா, நவம்பர் 28 (பெர்னாமா) -- நேற்று நள்ளிரவு முதல் பல மாநிலங்களில் வீசத் தொடங்கிய SENYAR வெப்பமண்டலப் புயலால் 49 மரங்கள் சாய்ந்ததோடு ஒரு மரண சம்பவமும் பதிவாகி உள்ளது.

இன்று அதிகாலை ஜாலான் செலந்தர்–மச்சாப் இல் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சாய்ந்திருந்த மரத்தின் மீது மோதி உயிரிழந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முஹமட் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, போர்ட் டிக்ச-இல் உள்ள பெட்ரான் ஜெட்டி டீசல் தளத்தில் கட்டமைப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் அங்கிருந்த பணியாளர்கள் எண்மர் பாதிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முஹமட்

''அதோடு, நெகிரி செம்பிலானில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும், நெகிரி செம்பிலானில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. ஒட்டுமொத்தத்தில், நெகிரி செம்பிலானில் சென்யார் தொடர்பான மிக மோசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதாவது, 33 மரங்கள் சாய்ந்த சம்பவங்கள், 1 நிலச்சரிவு மற்றும் 1 கட்டமைப்பு இடிந்து விழுந்தது மற்றும் 2 இடங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.'' என்றார் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முஹமட் 

நெகிரி செம்பிலான்-இல் 33 மலாக்காவில் எட்டு, சிலாங்கூரில் ஐந்து, புத்ராஜெயாவில் இரண்டு மரங்கள் சாய்ந்த வேளையில் பேராக்கில் ஒரு மரம் சாய்ந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)