கோத்தா கினபாலு, நவம்பர் 27 (பெர்னாமா) -- பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகும் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கன்டார் முஹமட் அகினின் முடிவு, மத்திய அரசாங்கத்தின் ஆட்சியில், மடானி அரசாங்கம் நேர்மையையும், நிர்வாக முறையையும் நிலைநிறுத்தி வருவதற்கான சான்றாகும்.
நேர்மையைப் பாதிக்கும் எந்தவொரு தவறான நடத்தையிலும் ஈடுபட்டால், ஒவ்வொரு ஊழியரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.
''நீங்கள் குற்றவாளி என்று கண்டறியப்பட்டால், முழு விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அப்போதுதான் இந்த நாட்டை நாம் உண்மையிலேயே கவனித்துக் கொள்ள முடியும்,'' என
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாம் ஒரு வெற்றிகரமான நாடாக இருக்க விரும்பினால், அது நல்லாட்சியுடன் தொடங்க வேண்டும் என்பதால் அதை வலியுறுத்தியதாக பிரதமர் விளக்கினார்.
இன்று, சபா, கோத்தா கினபாலுவில் இனனாம் இளைஞர்களுடனான பிரதமரின் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கேள்வி பதில் நேரத்தின்போது அவர் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)