Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஜே.கே.எம்-இன் புதிய அமைப்பின் மூலம், உதவி விநியோகத்தை வலுப்படுத்த அரசாங்கம் உறுதி

26/11/2025 03:36 PM

கோலாலம்பூர், நவம்பர் 26 (பெர்னாமா) -- 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஜே.கே.எம்-இன் புதிய அமைப்பின் மூலம் உதவி விநியோகத்தை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

மேலும் மாதாந்திர உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மகளிர் குடும்பம் மற்றும் சமூகநல மேம்பாட்டு அமைச்சர்  டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்திருக்கின்றார்.

தற்போதுள்ள அமைப்பு அதிகபட்ச பயன்பாட்டை எட்டியுள்ளதாலும் பணம் செலுத்தும் செயல்முறை மிகவும் நிலையானதாக இருப்பதை உறுதி செய்வதற்கு விரிவான மேம்பாடுகள் தேவைப்படுவதாலும் சிலருக்கு உதவித் தொகை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுவதாக அவர் விளக்கினார்.

''எனவே ஜே.கே.எம் அதன் மறுகட்டமைப்பை விரைவுபடுத்த உதவும். இந்த செயல்முறையை ஒரு மாதத்திற்குள் நாங்கள் செய்து முடிப்போம். இதற்கிடையில், அவசரத் தேவை ஏற்பட்டால், ஜே.கே.எம் உடனடி உதவி நிதியிலிருந்து பண உதவியை வழங்க முடியும். மேலும், கணக்கு இல்லாதவர்களுக்கு, அவர்கள் ஒரு கணக்கைத் திறக்கும் வரை ஆறு மாத காலத்திற்குப் பணத்தைப் பெற நாங்கள் அனுமதிப்போம்.'' என்றார் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி 

தற்போது வரை ஐந்து லட்சத்து 56,300 பெறுநர்கள் ஜே.கே.எம்-இன் வழி உதவி தொகை பெற்று வருகின்றனர். அதன் மதிப்பு 228 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)