கடுனா, 22 நவம்பர் (பெர்னாமா) -- ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கடுனா எனும் மாநிலத்தில், பள்ளிக்குள் புகுந்த ஆயுதக் கும்பல் ஒன்று 227 பேரை கடத்தி சென்றுள்ளது.
கடத்தி செல்லப்பட்டவர்களில் 215 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் இருவர் சுட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், போலீஸ் அதனை உறுதிபடுத்தவில்லை.
ஒரே வாரத்தில் இரண்டாது முறையாக மாணவர்கள் கடத்தப்பட்ட நிலையில் பள்ளிகளை தற்காலிகமாக மூட நைஜீரிய அரசு ஆணையிட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் மீதான படுகொலை சம்பவங்களை தடுக்க அந்நாடு முயற்சி மேற்கொள்ளவில்லை என்றால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து, நைஜீரியாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகள் மீது இது போன்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை நைஜீரிய அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)