Ad Banner
Ad Banner
 பொது

ஐந்து முனைப் போட்டியை எதிர்கொள்ளும் ஹஜிஜி

15/11/2025 03:59 PM

சபா 15 நவம்பர் (பெர்னாமா) -- சுலைமான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபா மாநில முதலமைச்சரும், சபா மக்கள் கூட்டணி கட்சி, ஜி.ஆர்.எஸ் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நொர் 17-வது சபா மாநில தேர்தலில் ஐந்து முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.

மாநில தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செயல்முறை நிறைவு பெற்ற பின்னர், துவாரான் தேர்தல் நிர்வாக அதிகாரி இப்ராஹிம் தெர்கி அதனை அறிவித்தார்.

"முதலாவது நபர் ஷானோன் ரிசால் தைஜுடின், இரண்டாவது நபர் ஜி.ஆர்.எஸ். சேர்ந்த ஹாஜிஜி முஹமாட் நூர், மூன்றாவது நபர் வாரிசானைச் சேர்ந்த மொக்தார் ஹுசின், நான்காவது நபர் பி.என் சேர்ந்த தியாமினா @ சிட்டி அமினா எலே, ஐந்தாவது நபர் பி.பி.ஆர்.எஸ் சேர்ந்த பஜுடின் நோர்டின்," என்றார் இப்ராஹிம் தெர்கி.

இதனிடையே, ஜி.ஆர்.எஸ் தலைவரான டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நொர் அதிக பெரும்பான்மையுடன் சுலாமன் தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"சுலாமன் பகுதியில் ஜி.ஆர்.எஸ் வேட்பாளர் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்றார் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நூர்.

இம்முறை நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் சுமார் 17 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)