Ad Banner
Ad Banner
 பொது

சபா மாநில வருவாயில் 40% பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கும்

13/11/2025 02:49 PM

கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- சபா மாநிலத்தின் வருவாயில் 40 விழுக்காடு பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொழில்நுட்ப நிலையில் உடனடியாக தொடங்கும். 17-வது சபா மாநில தேர்தல் காலக்கட்டத்தில் கூட அப்பேச்சுவார்த்தைகள் தொடரப்படும்.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அந்நிர்வாகத்தை இடைக்கால அரசாங்கம் வழிநடத்தி கொண்டிருந்தாலும் பேச்சுவார்த்தைச் செயல்முறைக்குப் பாதிப்பு ஏற்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பேச்சுவார்த்தை அமர்வை தொடங்குவது குறித்து சபா மாநில தலைமைச் செயலாளரின் அலுவலகத்திற்கு கருவூலத் தலைமைச் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியதாக அன்வார்  தெரிவித்தார்.

"தொடர்ந்து, தொழில்நுட்ப விவகாரங்களில் நிதியமைச்சர், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையைக் குறிப்பிடுவதற்கு கட்டாயமாக விவாதிக்கப்படும். தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், அது முன்னதாக தொழில்நுட்ப நிலையிலான விவாதங்களைப் பாதிக்காது என்று நான் நினைக்கின்றேன்" என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம். 

சபாவில் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் வருவாயில் 40 விழுக்காடு பெறுவது குறித்தச் பேச்சுவார்த்தை செயல்முறை மற்றும் 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த செயல்முறை நடவடிக்கை மன்றத்தில் பேச்சுவார்த்தைக்கான முடிவுகள் இறுதி செய்யப்படுமா என்பது குறித்து பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மொஹமட் ஷஹர் அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)