Ad Banner
Ad Banner
 பொது

பெர்னாமா செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தி ஆசிரியர் காலமானார்

13/11/2025 02:28 PM

கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) --  பெர்னாமா செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.சிவசெல்வம் உடல்நலக் குறைவால் தமது 77-வது வயதில், இன்று காலமானார். 

கோலாலம்பூர், செராஸில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணிக்கு இயற்கை ஏய்தியதை, தமது மனைவி லலிதா எஸ்.நடராஜன் உறுதிப்படுத்தினார்.  

இதனிடையே, அன்னாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கம்போங் துங்கு மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று பெர்னாமாவின் முன்னாள் ஊழியருமான லலிதா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)