புத்ராஜெயா, 12 நவம்பர் (பெர்னாமா) -- அரசாங்க ஊழியர்கள் தற்போதைய அடைவுநிலைகளில் திருப்தி அடைவதைக் காட்டிலும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் சேவையின் தரத்தை உயர்த்தவும் தொடர்ந்து முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கடமைகளை நிறைவேற்றுவதில் நேர்மை, பொறுப்பு மற்றும் நம்பிக்கையின் மதிப்புகளை வலுப்படுத்த கூடுதல் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நபி முஹமட்டின் போதனைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பணியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
''நமது பதவிகள், பட்டங்கள், விருதுகள், பதக்கங்கள், பரிசுகள் மற்றும் உயர் பதவிகள் மூலம் நாம் உண்மையிலேயே நமது நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளோமா?'' என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு தேசிய மேம்பாட்டு கருத்தரங்கு மற்றும் விருதுகள் SPAPN தொடக்க விழாவில் உரையாற்றிய அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)