ஆப்கானிஸ்தான், 4 நவம்பர் (பெர்னாமா) -- வடக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ரிக்டர் அளவைக் கருவியில் 6.3ஆக பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 பேராக உயர்ந்துள்ளது.
மேலும், 733 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால், சமஙான் மாகாணத்தில், இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் மற்றும் தீக்கிரையான கார்களையும் சுத்தம் செய்யும் பணியில் குடியிருப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளையில், தங்களின் உடமைகளும் வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததாக மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தில், மின்சாரக் கம்பிகள் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samangan-னை தவிர்த்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களான பால்க், சார்-இ போல், பாஃலான், மற்றும் குன்டூஸ் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)