ஷா ஆலம், 01 நவம்பர் (பெர்னாமா) -- போதைப்பொருள் விநியோகிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களுக்குப் பொட்டலம் மற்றும் கடித பட்டுவாடா சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு மலேசிய பொட்டலம் மற்றும் கடித பட்டுவாடா விரைவு சேவை சங்கம், போலீஸ் மற்றும் சுங்கத் துறை இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது.
பொருள்களை அனுப்பும் துறையைச் சேர்ந்தவர்கள் இப்பிரச்சினையை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் தற்போதுள்ள இடைவெளிகளைத் தீர்க்க பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இது அனுமதிக்கும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் செயல்பாட்டு முறையை இங்கு நாம் காணலாம். மேலும் செயல்பாட்டில் ஏதேனும் அனுமதி மீறல்கள் இருந்தால் பொட்டலம் மற்றும் கடித பட்டுவாடா துறை அதை கண்டறிந்து கவனத்தில் கொண்டு உடனடியாகப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் குரிப்பிட்டார்.
சிலாங்கூர் ஷா ஆலமில் நடைபெற்ற தேசிய பொட்டலம் மற்றும் கடித பட்டுவாடா சேவை தினத்தில் கலந்து கொண்ட பின்னர் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
பாம்புகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்கள் விரைவு சேவையைப் பயன்படுத்தி அனுப்புவதும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)