சுபாங் ஜெயா, 29 அக்டோபர் (பெர்னாமா) -- முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினின் மருமகனும் தொழிலதிபருமான டத்தோ ஶ்ரீ முஹமட் அட்லான் பெர்ஹான் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் விசாரணை நிறைவு பெற்றது.
தற்போது, தங்கள் தரப்பு மேல் நடவடிக்கைக்காக காத்திருப்பதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர், டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் இருப்பதாக நம்பப்படும் முஹமட் அட்லான் மற்றும் வழக்கறிஞர் மன்சூர் சஹாட் ஆகியோரை உட்படுத்தி அமைச்சு ஒன்றில் நடந்த ஊழல் மற்றும் திட்ட முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களையும் தங்கள் தரப்பு பதிவு செய்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
''இல்லை, இல்லை, நான் அவர் திரும்பி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால், அனைத்து வழக்குகளும், உரையாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, வழக்கும் முடிந்தது. நீங்கள் அவர் மீதும் வழக்கறிஞரிடமும் குற்றம் சாட்ட விரும்பிய ஒரே விஷயம். அவர்கள் இருவரும் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவர்கள் நாட்டிற்குத் திரும்ப நாங்கள் இன்னும் கண்காணிப்பை மேற்கொள்கிறோம். எனவே, இது குறித்த மேல் விசாரணை நிறைவடைந்து விட்டது. முடியாவிட்டால் நாங்கள் குற்றச்சாட்டுகளை வெளியிட முடியாது,'' என்றார் அவர்.
இன்று நடைபெற்ற 21வது ASEAN-PAC எனப்படும் ஊழலுக்கு எதிரான தரப்புகளின் ஆசியான் கொள்கை கூட்டத்தின், முதன்மை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அசாம் அவ்வாறு குறிப்பிட்டார்.
தங்கள் தரப்பு வெளிநாட்டில் உள்ள Muhammad Adlan-னின் சொத்துக்களைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், இச்செயல்முறை சற்று கால அவகாசம் எடுக்கும் என்றும், மற்ற நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் ஒத்துழைப்பை உள்ளடக்கியதால் அது எளிதானது அல்ல என்றும் ஒப்புக்கொண்டார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வில், ஏரோடிரேன் சேவையைச் செயல்படுத்துவதில் அடிக்கடி இடையூறு ஏற்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் ஊழல் அல்லது முறைகேடுகள் ஏற்படுகின்றதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளும்.
எனினும், இத்திட்டம் தொடர்பாக இதுவரை எந்தவொரு புகார் அல்லது தகவல் கிடைக்கவில்லை என்று எஸ்.பி.ஆர்.எம்-இன் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
"இவ்விவகாரம் குறித்து இதுவரை எந்த புகார் அல்லது தகவல்களை நாம் பெறவில்லை. நாம் பார்க்க வேண்டும். எப்படி இருந்தால் அது என்ன தவறு என்பதை பொருத்தது. அனைத்து தவறுகளையும் எஸ்.பி.ஆர்.எம் தலையில் சுமத்த வேண்டாம்," என்று அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)