Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

திமோர் லெஸ்தேவுடன் புறநகர் மேம்பாட்டில் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள மலேசியா உறுதி

28/10/2025 05:04 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை விரைவுப்படுத்த உதவும் வகையில், திமோர் லெஸ்தேவுடன் புறநகர் மேம்பாட்டில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள மலேசியா உறுதி கொண்டுள்ளது.

1957-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தொடர் முயற்சிகளின் வழி, புறநகரை வளர்ச்சி கண்ட மற்றும் போட்டி நிறைந்த பகுதிகளாக உருமாற்றுவதில் மலேசியா விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.

''1957-ஆம் ஆண்டில், மலேசிய மக்கள் தொகையில் 93 விழுக்காட்டினர் புறநகர் பகுதிகளில் வாழ்ந்தனர். தற்போது 2025-ஆம் ஆண்டில், சுமார் 24.7 விழுக்காட்டினர் மட்டுமே புறநகர் பகுதிகளில் வாழ்கின்றனர். இதில், 81 லட்சம் மலேசியர்கள் புறநகர் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த அனுபவத்தைத்தான் நாங்கள் திமோர்-லெஸ்தேவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். மேலும், திமோர்-லெஸ்தே அதன் புறநகர் பகுதிகளை, மலேசியாவை விட வேகமாக மேம்படுத்தும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,'' என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை, புறநகர் மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக மலேசிய அரசாங்கத்திற்கும் திமோர்-லெஸ்தே அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், செய்தியாளர்களை டாக்டர் அஹ்மட் சாஹிட் சந்தித்தார்.

இந்த ஒத்துழைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சமூக மேம்பாட்டுத் துறை, கெமாஸ் மூலம் பாலர் பள்ளி கல்வி, புறநகர் தொழில்முனைவோர், டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)